மேஜர் லீக் கிரிக்கெட் 2025: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோல்ஸ் பூரன் எம்எல்சி தொடரின் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரைப் பின்பற்றி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அமெரிக்காவில் கடந்தாண்டு முதல் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) டி20 தொடரானது தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் சீசனில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கோப்பையை வென்றது.
இதையடுத்து எம்எல்சி தொடரின் இரண்டாவது சீசன் நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்த்து சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேற்கொண்டு நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.