அட்டாக் செய்ய வெண்டும் என்பதே என்னுடைய பிளான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆரம்பத்திலிருந்து அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் எங்களுடைய பிளான் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது லக்னோ அணி. ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி(61) மற்றும் டு பிளெசிஸ்(79) இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மேக்ஸ்வெல், 24 பந்துகளில் அரைசதம் கடந்து, 59 ரன்களுக்கு அவுட்டானார். 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய லக்னோ அணிக்கு மேயர்ஸ்(0), குர்னால் பாண்டியா(0), தீபக் ஹூடா (9) மூவரும் ஆட்டமிழக்க, 23/3 என லக்னோ அணி தடுமாறியபோது, உள்ளே வந்த ஸ்டாய்னிஷ் வெறும் 65(30) ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டு ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் உள்ளே வந்த நிக்கோலஸ் பூரான், நிறுத்தாமல் சிக்ஸர் மழை பொழிந்து 15 பந்துகளில் அரைசதமடித்தார். 19 பந்துகளில் 62 ரன்கள் அடித்து சிராஜ் பந்தில் அவுட்டானார்.
Trending
கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்தால் மேலும் பரபரப்பானது. 4ஆவது பந்தில் ஆட்டம் சமன் ஆனது. 5ஆவது பந்தில் விக்கெட் போனது. 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது, தினேஷ் கார்த்திக் செய்த தவறால் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
போட்டி முடிந்து பேசிய மார்கஸ் ஸ்டொய்னிஸ், “இது மிகவும் அழகான பிட்ச். உள்ளே வந்தபோது அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதே நேரம் மூன்று விக்கெட்டுகள் விழுந்திருந்ததால் என்னுடைய விக்கெட் மிகவும் முக்கியம் நான் ஆட்டம் இழந்தால் சிக்கல் தான் என்றும் நினைத்திருந்தேன். அணிக்கு முக்கியமான கட்டத்தில் பங்களிப்பு கொடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஐபிஎல்லில் எங்களுடைய அணி தான் மிகவும் இளமையானது. மேலும் ஹோம் மைதானத்தில் மட்டுமே போட்டிகளில் வென்றிருந்தோம்.
வெளி மைதானங்களில் போட்டிகளை வெல்லவில்லை என்பதால் இப்போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. 213 ரன்கள் டார்கெட் என்றாலும் இதை அடிக்க முடியும் என்று நாங்கள் நினைத்தோம். இது இன்னும் பெரிய ஸ்கூராக மாறி இருக்க வேண்டியது பவுலர்களால் 212 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இன்றைய போட்டியில் எங்களது பிளான், களமிறங்கி நல்ல துவக்கம் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான். அது வெளிப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now