
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
இதில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முன்சே 66 ரன்களும், கிறிஸ் 16 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.
அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார்.