
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று பல்லகலேவில் உள்ள சர்வதேச் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ள நிலையில் அதற்கு இத்தொடரில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பகிறது.
அதேசமயம் இலங்கை அணியோ டி20 தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டி தொடங்கும் முன்னரே இலங்கை அணியானது மிகப்பெரும் பின்னடைவை சந்திள்ளதுள்ளது.