
Nitin Menon Amongst List Of 16 Umpires For ICC T20 World Cup 2022 (Image Source: Google)
ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக 45 போட்டிகள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.
நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி போடிகள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.