ஐபிஎல் 2025: பயிற்சியில் தீவிரம் காட்டும் நிதீஷ் ரானா - வைரலாகும் காணொளி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் நிதீஷ் ரானா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், சந்தீப் சர்மா உள்ளிட்டோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர்.
Trending
மேற்கொண்டு ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, நிதீஷ் ரானா போன்ற வீரர்களையும் அணி ஏலத்தில் எடுத்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸும் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர், மேலும் அவர்களின் பயிற்சி அமர்வின் பல படங்கள் மற்றும் காணொளிகாள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன. அத்தகைய ஒரு காணொளியில், ராஜஸ்தானின் அணியின் புதிய வீரர் நிதிஷ் ராணா பயிற்சியின் போது சிக்ஸர்களை பறக்கவிடுவதை காணமுடிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களும் ராணாவின் பேட்டிங்கைப் பார்த்து திகைத்தனர்.
Sit back and enjoy pic.twitter.com/FMiLCYQtZK
— Rajasthan Royals (@rajasthanroyals) March 7, 2025மேலும் நிதீஷ் ரானா பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த காணோளி இணையத்தில் வைரலாகியும் வருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்படுவதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாவதை உறுதி செய்யும் வகையில் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாக விளையாடி வந்த நீதிஷ் ரானா வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்ற நிதீஷ் ராணாவை ரூ 4.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்த செய்தது. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now