
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில், 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவர் 8 சிக்ஸர்களை விளாசினார். 13 பவுண்டரிகளையும் அவர் அடித்தார். சொந்த மண்ணில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 46ஆவது சதத்தை அடித்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்த்தனேவைப்பின்னுக்கு தள்ளி விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய விராட் கோலி, “நான் விருதுகளுக்காகவும் சாதனைகளுக்காகவும் இப்போது விளையாடுவதில்லை. இதெல்லாம் நம் வெற்றிக்கு கிடைக்கும் ஒரு கூடுதல் பரிசாக தான் நான் இப்போது பார்க்கிறேன். என்னுடைய மனநிலை எல்லாம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும். ஆடுகளத்தில் அதிக நேரம் நின்று பேட்டிங் செய்ய வேண்டும். இது மட்டும் தான் தற்போது என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.