Advertisement

பும்ரா போன்ற வீரருக்கு நிகரான வீரர் இல்லை - ஷேன் வாட்சன்!

பும்ராவைப் போன்ற ஒருவருக்கு நிகரான மாற்று வீரர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இல்லை என்று  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 02, 2022 • 19:14 PM
 No like-for-like replacement for Jasprit Bumrah in world, leave alone India: Shane Watson
No like-for-like replacement for Jasprit Bumrah in world, leave alone India: Shane Watson (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் விளையாடவில்லை என்ற தகவல் வெளியானது.

காயத்திலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஆடிய பும்ரா, மீண்டும் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார்.

Trending


பும்ரா காயத்திலிருந்து மீண்டுவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என கூறப்படும் நிலையில் அவர் டி20 உலக கோப்பையில் விளையாட வாய்ப்பே இல்லை. தென் ஆப்பிரிக்க தொடருக்கான பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சிராஜ் எடுக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பவர்ப்ளே, டெத் ஓவர்கள், மிடில் ஓவர்கள் என ஆட்டத்தின் எந்த சூழலிலும் அபாரமாக பந்துவீசக்கூடியவர் பும்ரா. குறிப்பாக குறைவான ஸ்கோர் போட்டிகளில் டெத் ஓவர்களில் பெரிய வித்தியாசமாக இருப்பவர் பும்ரா தான். பும்ரா ஆடாதது தான் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

பும்ராவின் இடத்தை மற்றொரு வீரர் நிரப்புவது என்பது மிகக்கடினம். சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பும்ராவிற்கு மாற்று வீரராக எடுக்கப்படுவார் என தெரிகிறது. அப்படியில்லையென்றால், தீபக் சாஹர் எடுக்கப்படலாம். 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன், “ஜஸ்ப்ரித் பும்ரா ஆடவில்லை என்றால் இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வது மிகக்கடினம். பும்ரா அட்டாக்கிங் மற்றும் டிஃபென்சிவ் பவுலர். ரன்னையும் கட்டுப்படுத்தி, விக்கெட்டும் வீழ்த்தவல்ல உலகின் சிறந்த பவுலர் பும்ரா. அவர் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. 

பும்ராவை ஒத்த, அவருக்கு நிகரான மாற்று பவுலர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இல்லை. மிகவும் நெருக்கமாக செல்லும் போட்டிகளில் டெத் ஓவர்களை அருமையாக வீசி போட்டிகளை முடித்துக்கொடுக்கவல்ல பவுலர் பும்ரா. 

அவர் இல்லாமல் அதை செய்வது மிகக்கடினம். டி20 உலக கோப்பையை இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றால், மற்ற பவுலர்கள் முன்வந்து அந்த பணியை செவ்வனே செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement