ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ராஜத் படிதார்!
விக்கெட் எப்படி விளையாடினாலும், நாம் நன்றாக பேட்டிங் செய்து வெற்றிக்கான ஸ்கோரைப் பெற வேண்டும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் அரைசதம் கடந்தது 50 ரன்களையும், அணியின் கேப்டன் ராஜத் படிதார் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியன்ஷ் ஆர்யா 16, பிரப்ஷிம்ரன் சிங் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஜோஷ் இங்கிலிஸ் 14, ஷஷாங்க் சிங் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தாலும் நேஹல் வதேரா 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய ராஜத் படிதார், “இந்த மைதானம் தொடக்கத்தில் இரண்டு வேகத்தில் இருந்தது, ஆனால் ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். பார்ட்னர்ஷிப்கள் முக்கியம், விரைவான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம், அதுவே எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். மேற்கொண்டு சூழ்நிலைகள் காரணமாக படிக்கல்லிற்கு எங்களால் இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இந்த விக்கெட் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனாலும் இந்த போட்டிக்கான மொத்த பாராட்டுகளும் பந்துவீச்சாளர்களையே சேரும். விக்கெட் எப்படி விளையாடினாலும், நாம் நன்றாக பேட்டிங் செய்து வெற்றிக்கான ஸ்கோரைப் பெற வேண்டும். பந்துவீச்சு யூனிட் நன்றாகச் செயல்படுகிறது, அது ஒரு பெரிய நேர்மறை. அதனால் பேட்டிங் யூனிட்டில் செய்யும் தவறுகளை சரிசெய்வது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now