Advertisement

டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய டெவால்ட் பிரீவிஸ்!

தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் 35 பந்துகளில் சதமும், 57 பந்துகளில் 162 ரன்களையும் குவித்து உலக சாதனையை படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 01, 2022 • 10:12 AM
'No need to say more' – AB de Villiers reacts after Dewald Brevis hits fastest 150 in T20 history
'No need to say more' – AB de Villiers reacts after Dewald Brevis hits fastest 150 in T20 history (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டைடன்ஸ் அணியும், நைட்ஸ் அணியும் மோதிய ஆட்டம், தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டைடன்ஸ் அணி வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டி20 கிரிக்கெட்டில் இதுவும் சாதனையாகும். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி இவர் 57 பந்துகளில் 284.21 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தலா 13 பவுண்டரி, 13 சிக்ஸர் உட்பட 162 ரன்களை குவித்து உலக சாதனை படைத்துள்ளார். ஐபிஎலில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கிறிஸ் கெய்ல் 175 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

Trending


150 ரன்களை கடக்க கெய்ல் 53 பந்துகளை எடுத்துக் கொண்ட நிலையில், பிரீவிஸ் 52 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதுவும் ஒரு உலக சாதனையாகும்.

 

டெவால்ட் பிரீவிஸ் 162 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், இளம் வயதில் (19 வயது) டி20 லீக் தொடர்களில் 150+ ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

பிரீவிஸ் 162 ரன்களை விளாசியதன், டைடன்ஸ் அணி 20 ஓவர்களில் 272 ரன்களை குவித்தது. இதயடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய நைட்ஸ் அணியும் கடைசிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மொத்தம் இரண்டு அணிகளும் சேர்த்து 502 ரன்களை அடித்துள்ளனர். 

இந்நிலையில் ஏபி டிவிலியர்ஸ் உட்பட பல தென் ஆப்பிரிக்க முன்னாள், இந்நாள் வீரர்கள் பிரீவிஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி டிவிலியர்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘டெவால்ட் பிரீவிஸ், இதற்குமேல் எதுவும் சொல்ல தேவையில்லை’’ எனப் பதிவிட்டுள்ளார். அல்பி மோர்கல் வெளியிட்ட ட்வீட்டில், ‘‘அடுத்த 15 வருசத்திற்கு பௌலர்கள் பலர் இவரால், கடும் அழுத்தத்துடன் இருப்பார்கள்’’ எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement