
ஆசிய கோப்பை தொடர் குறித்து ஜெய் ஷா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவித்திருந்தார்.
பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பேசியிருந்த அவர், பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால், இந்திய அணி அங்கு செல்லாது என்றும், ஆசிய கோப்பை தொடரை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட பாகிஸ்தான் வாரியம் கடும் எச்சரிக்கையை விடுத்தது.
இதுகுறித்து அந்நாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்லாது. இதே போல ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கவுன்சிலில் இருந்து விலகிவிடுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.