
‘No one comes back to form while resting’ – Irfan Pathan (Image Source: Google)
இங்கிலாந்து உடனான தொடர் முடிந்த கையோடு வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது.
வரும் 22 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்காக ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.