பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி குறித்து கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம்!
பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.
இதையடுத்து பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் பொருளாதாரம் பற்றி பேசாத முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன் ஆட்சி கவிழ்ப்பில் சதி இருப்பதாக பேரணி நடத்தி வருகிறார்.
Trending
இந்நிலையில் பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லாகூரில் என்ன நடக்கிறது? பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை. ஏடிஎம் இயந்திரங்களி பணம் இல்லை. அரசியல் வாதிகள் எடுக்கும் முடிவுகளால் பொதுமக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” இவ்வாறு முகமது ஹபீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
No Petrol available in any petrol station in Lahore??? No cash available in ATM machines?? Why a common man have to suffer from political decisions. @ImranKhanPTI @CMShehbaz @MaryamNSharif @BBhuttoZardari
— Mohammad Hafeez (@MHafeez22) May 24, 2022
இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ, பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now