Advertisement

SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 08, 2024 • 17:17 PM
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்!
SL vs AFG: இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு; தசுன் ஷனகா நீக்கம்! (Image Source: Google)
Advertisement

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது கடந்த 02ஆம் தேதி கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. 

அதன்படி இலங்கை ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான அந்த அணியில் முகமது நபி, ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, குல்பதின் நைப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், இப்ராஹிம் ஸத்ரான் போன்ற நட்சத்திர வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Trending


இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. குசால் மெண்டிஸ் தலைமையிலான இந்த அணியில், சரித் அசலங்கா அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பதும் நிஷங்கா, வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா ஆகியோருடன், சதீரா சமரவிக்ரமா, அகிலா தனஞ்செயா, துஷ்மந்தா சமீரா, தில்ஷன் மதுஷங்கா போன்ற நட்சத்திர வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை ஒருநாள் அணி: குசல் மெண்டிஸ் (கே), சரித் அசலங்கா, பதும் நிஷங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே,ஷெவோன் டேனியல், ஜனித் லியனகே, சாமிக்க கருணாரத்ன, மஹீஸ் தீக்ஷன, தில்ஷன் மதுஷங்கா, துஷ்மந்த சமீரா, துனித் வெல்லலாகே, பிரமோத் மதுஷன், அகில தனஞ்சய, வநிந்து ஹசரங்க.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement