தவானுக்கு வார்னிங் கொடுக்கவுள்ளதா பிசிசிஐ?
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் ஷிகர் தவானுக்கு பிசிசிஐ தேர்வுக்குழு எச்சரிக்கை விடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் ஷிகர் தவான் தான்.
கடந்த 2 வருடங்களாகவே அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வரும் ஷிகர் தவான், இலங்கை தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என ஏதேனும் ஒரு சில தொடர்களுக்கு மட்டும் திடீரென அழைக்கப்பட்டு வருகிறார். அவரின் இடத்தில் கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸுடனான முதல் ஒருநாள் போட்டியில் தவான் 97 ரன்கள் அடித்து தன்னை நிரூபித்தார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால் ரோகித் சர்மா உடனான பிரச்சினை உள்ளது.
Trending
ரோஹித் சர்மா இந்திய அணியின் பேட்டிங் திட்டத்தை மாற்ற முயற்சித்து வருகிறார். அதாவது, ஆட்டத்தின் முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடி பவர் ப்ளேவில் அதிக ஸ்கோர் இருந்தால் தான் வெற்றி பெற முடியும். 50 ஓவர் கிரிக்கெட் என்பது டி20 கிரிக்கெட்டின் மற்றொரு அங்கம் தான். டி20 கிரிக்கெட்டை விட, ஒருநாள் கிரிக்கெட்டில் ரிஸ்க் குறைவாக எடுக்கலாம். ஆனால் ரிஸ்க் எடுத்து அதிரடியாக தான் விளையாடி ஆக வேண்டும் எனக் கூறி வருகிறார்.
ஆனால் ஷிகர் தவான் அதற்கு நேர்மாறாக உள்ளார். முதலில் சில பந்துகளை கவனித்து நிதானமாக விளையாடிவிட்டு, பிட்ச்-ஐ உணர்ந்துவிட்டு, அதிரடியில் களமிறங்குகிறார். இதுதான் இத்தனை வருடங்கள் ஒருநாள் கிரிக்கெட்டின் ஃபார்முலாவாக இருந்தது. ஆனால் ரோஹித் வந்தவுடன் அவற்றை மாற்றுமாறு கூறி வருகிறார்.
இந்நிலையில் தவானுடன் பிசிசிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதாவது கிரிக்கெட்டில் இனி எதிர்காலம் வேண்டுமென்றால், பேட்டிங் முறையை மாற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால் இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் என எச்சரிக்கை விடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தவான் அதிரடி காட்ட ஒப்புக்கொண்டால் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் அதற்கு உதவவுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவானின் ஸ்ட்ரைக் ரேட் 76.03 தான். ஆனால் சுப்மன் கில் (104.9), இஷான் கிஷான் (107.31) வைத்துள்ளனர். எனவே ரோகித் சர்மா தனக்கு ஏற்ற வகையில் அதிரடி காட்டும் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் சிறப்பாக விளையாடியும், தவான் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now