
ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இந்த தொடர் முடிந்த பின் பாகிஸ்தான் அணி தாயகம் திரும்பியது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதையடுத்து இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறது. அங்கு ராவல்பிண்டி, கராச்சி, முல்தான் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அணியின் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் காயம் காரணமாக் ஷாஹீன் அஃப்ரிடி இடம் பெறவில்லை. மாறாக அப்ரார் அகமது, முகமது அலி ஆகியோர் இத்தொடரில் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.