இந்த வருட ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த ஆர்சிபி அணி கடந்த இரண்டு மூன்று ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து தங்களது பிளே ஆஃப் தகுதியை கேள்விக்குறியாக்கி இருக்கிறது . டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் 11 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 5 வெற்றிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது .
நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது . இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாகும் . கொல்கத்தா அணியுடன் பெற்ற வெற்றியின் மூலம் ரன் ரேட்டிலும் முன்னிலை பெற்ற ராஜஸ்தான் அணி தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது . இந்தப் போட்டியின் வெற்றி மற்றும் தோல்வி இரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை
பெங்களூர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அணிக்காக தான் எடுத்த சில முடிவுகள் தவறுதலாக இருந்தாலும் அதற்காகத்தான் வெட்கப்பட்டதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் . 2014ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக பதவி வகித்தவர் விராட் கோலி .