Advertisement
Advertisement
Advertisement

மெஹதி ஹாசன் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - லிட்டன் தாஸ்!

இந்த போட்டியின் போது நான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஓய்வறையில் படபடப்புடன் அமர்ந்து கொண்டே போட்டியை பார்த்தேன் என வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 05, 2022 • 12:26 PM
No words to describe how I feel - Liton Das!
No words to describe how I feel - Liton Das! (Image Source: Google)
Advertisement

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டாக்கா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது வங்கதேச அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 73 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Trending


இதனால் நிச்சயம் இந்திய அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெஹதி ஹாசன் மற்றும் முஸ்தஃபிசுர் ரகுமான் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற த்ரில் வெற்றி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் கூறுகையில்,“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியின் போது நான் ஆட்டம் இழந்து வெளியேறியதும் ஓய்வறையில் படபடப்புடன் அமர்ந்து கொண்டே போட்டியை பார்த்தேன். ஆனால் கடைசி 6-7 ஓவர்கள் மெஹதி ஹாசன் விளையாடும் விதம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் இந்திய பவுலர்களை மிகச் சிறப்பாக கையாண்டு ரன்களை குவித்தார். இந்த போட்டியில் சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் பந்துவீசிய விதம் மிடில் ஓவர்களில் ஆட்டத்தை அவர்களது பக்கம் கொண்டு சென்றது. அதேபோன்று ஷாகிப் அல் ஹசனுடன் நான் விளையாடிக் கொண்டிருந்தபோது எளிதாக இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்தேன்.

ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி போட்டியை இறுதிவரை பரபரப்பாகக் கொண்டு சென்றனர். அதே வேளையில் மெஹதி ஹாசன் எங்களுக்கான இந்த வெற்றியை மிகச் சிறப்பாக பெற்றுக் கொடுத்தார்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement