'நான் இதை என் கனவில் கூட நினைத்ததில்லை...' -ராஸ் டெய்லர்!
எங்கள் கனவில் கூட நாங்கள் இந்திய அணியை கிளீன் ஸ்வீப் செய்வோம் என்று நினைக்கவில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்து அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடேவில் நடைபெற்ற நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்தது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா அணியும் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னார் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 174 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
Trending
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நியமிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணி வைட்வாஷ் செய்து அசத்தியது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் சில கருத்துகளைக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாட்டின் பெரும்பாலான மக்களைப் போலவே, நானும் எங்கள் அணியின் வெற்றியாஇ நினைத்து பிரமிப்பில் இருக்கிறேன். முழுத் தொடரிலும் அவர்கள் விளையாடிய விதத்தை நான் பாராட்டுகிறேன்.
நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்ததை விட அதிகமாக வேறு எதையும் நம்பியிருக்க வில்லை. ஆனால் எங்கள் அணி வீரர்கள் இத்தொடரை முழுமையாக கைப்பற்றியது குறித்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் நியூசிலாந்து மக்களும், வீரர்களும் மீளவில்லை. ஏனெனில் கடைசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றதிலிருந்து இதுபோன்ற வெற்றிகளை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து கிரிக்கெட் பொதுமக்கள் இந்திய கிரிக்கெட் அணியை எவ்வளவு உயரத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதையும், அங்கு சென்று வெற்றி பெறுவது எப்படி இருக்கும் என்பதையும் இது உங்களுக்குச் சொல்கிறது என்று நினைக்கிறேன். பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நாங்கள் வென்ற பிறகு, அது அணிக்கும் ரசிகர்களுக்கும் சில நம்பிக்கையை அளித்தது, ஆனால் எங்கள் கனவில் கூட நாங்கள் இந்திய அணியை கிளீன் ஸ்வீப் செய்வோம் என்று நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now