களத்தில் இருப்பது போல் வெளியேயும் இருக்க மட்டோம் - முகமது ரிஸ்வான்
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு எதிரணியையும் நாங்கள் மதிக்கிறோம் ஆனால் களத்தில் வீழ்த்துவதுதான் குறிக்கோள் என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அபாரமாக விளையாடியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.\
குரூப் ஸ்டேஜில் தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைக் கொண்டாடியது. பாகிஸ்தான் பவுலர் ஷாஹின் அஃப்ரீடி பிரமாதமாக பந்துவீசி ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலை அடுத்தடுத்து வீழ்த்தி அபாரத் தொடக்கம் கொடுத்தார். பிறகு ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் நோ-லாஸில் வென்றது இந்திய ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவானது.
Trending
இந்நிலையில் ரிஸ்வான் இந்திய வீரர்கள் மட்டுமல்ல அனைத்து எதிரணி வீரர்களுடனான உறவு பற்றி கூறும்போது, “ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைப் பற்றி எங்களுக்கு வெவ்வேறு உணர்வுகள் மற்றும் கருத்துகள் இருக்கலாம் ஆனால் களத்தில், நாங்கள் அவர்களை வீழ்த்துவது பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், களத்திற்கு வெளியே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் அதிக மரியாதையும் அன்பும் இருக்கிறது.
இதை சொல்கையில் நான் இன்னொன்றையும் கூறி விடுகிறேன் அதற்காக 99 ரன்களில் ஆடும் வீரரை சதமெடுக்கப் போட்டுக் கொடுக்க மாட்டோம், அங்கு நட்பு, பாசம் கிடையாது. இது ஒருபோதும் நடந்ததில்லை. எங்களிடம் ஒரே ஒரு சிந்தனை செயல்முறை மட்டுமே இருந்தது, அது எந்த நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே.
போட்டிக்குப் பிறகு, நிறைய வீரர்கள் தோனி மற்றும் விராட் ஆகியோரிடம் பேசுவதைப் பார்த்தீர்கள். மைதானத்திற்கு வெளியே, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அல்லது நமீபியா என அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரே கிரிக்கெட் குடும்பம் போல் நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now