பேட்டிங் பயிற்சியில் அதிரடி காட்டும் பும்ரா - வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி வைரலாகி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியிருந்த போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இத்தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும், பிளே ஆஃப் சுற்றுக்கான மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் எஞ்சிய போட்டிகளுக்கான தங்களுடைய தயாரிப்புகளில் இறங்கிவுள்ளன.
அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்கள் பயிற்சிகளை தொடங்கிவுள்ளனர். அதன் ஒருபகுதியாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பும்ரா தற்சமயம் பந்துவீச்சுக்கு பதிலாக பேட்டிங்கில் அதிகமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு முன்னதாக, பயிற்சியில் ஈடுபட்டு வரும் பும்ரா அதிரடியான ஷாட்களை அடித்து பந்தை பறக்கவிட்டார். பும்ராவின் இந்த ஷாட்களை பார்த்த ரசிகர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நினைவு கூர்ந்தனர், அப்போது அவர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 35 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் பும்ரா வலைபயிற்சியில் அதிரடியாக விளையாடும் காணொளி வைரலாகி வருகிறது. \
Also Read: LIVE Cricket Score
காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான ஃபார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் இதுவரை 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை அணி இன்னும் பிளேஆஃப் பந்தயத்தில் இருப்பதால் அவரது ஃபார்ம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறுவது முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now