
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
துபாய் சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்
இதனையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் 31 ரன்னிலும், நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ரோஹித் சர்மா 76 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணி 122 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.