
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது ஜூலை 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கா இலங்கை டி20 அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக விலகினர். இலங்கை அணியின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதில் துஷ்மந்தா சமீரா 55 டி20 போட்டிகளில் 55 விக்கெட்டுகளையும், நுவான் துஷாரா 11 டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.