
NZ Bowler Hamish Bennett Announces Retirement From All Forms Of Cricket (Image Source: Google)
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹமிஷ் பென்னட். தற்போது 35 வயதகும் அவர், நியூசிலாந்து அணிக்காக 2010 முதல் 2021 வரை 1 டெஸ்ட், 19 ஒருநாள், 11 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
நியூசிலாந்து யு19, நியூசிலாந்து ஆடவர் அணி மற்றும் வெலிங்டன், கேன்டர்பரி உள்ளூர் அணிகளில் பென்னட் விளையாடியுள்ளார். கடைசியாக 2021-ல் சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். இந்நிலையில் 2021-22 பருவத்துக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பென்னட் அறிவித்துள்ளார்.
2010இல் கேன் வில்லியம்சன், இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் அறிமுகனார். அதே டெஸ்டில் அறிமுகமான பென்னட், விக்கெட் எதுவும் எடுக்காமல் 15 ஓவர்களை வீசினார். அதன்பிறகு எந்தவொரு டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை.