NZ Pacer Matt Henry Ruled Out Of ODI Series Against West Indies Due To Injury (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி காயம் காரணமாக விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.