NZ vs AUS: தொடரிலிருந்து விலகினார் வில்லியம் ஓ ரூர்ய்; பென் சீயர்ஸ் அணியில் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து வீரர் வில்லியம் ஓ ரூர்க் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியோ அல்லது சமனிலோ முத்தால் கூட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இதனால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வில்லியம் ஓ ரூர்க் விலகியுள்ளார்.
மேலும் அவருக்கு மாற்று வீரராக பென் சீயர்ஸ் நியூசிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக டி20 தொடரில் காயமடைந்த டெவான் கான்வே டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஹென்றி நிக்கோலஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தற்போது வில்லியமும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி: டிம் சதீ (கே), டாம் ப்ளூன்டெல், மேட் ஹென்றி, ஸ்காட் குகெலிஜ்ன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.
Win Big, Make Your Cricket Tales Now