ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டில் வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து பந்துவீசுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேமரூன் க்ரீன் 103 ரன்களுடனும், ஜோஷ் ஹசில்வுட் இணை தொடர்ந்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் மளமளவென ஸ்கோரை உயர்த்தி அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் 22 ரன்கள் எடுத்திருந்த ஜோஷ் ஹசில்வுட் விக்கெட்டை இழந்ததால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஆனாலும் ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.