-mdl.jpg)
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக டிம் செய்ஃபெட் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை வீசிய ஷொரிஃபுல் இஸ்லாம், நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் நியூசிலாந்து அணி ஒரு ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த டெரில் மிட்செல் - மார்க் சாப்மேன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் மிட்செல் 14 ரன்களிலும், மார்க் சாப்மேன் 19 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ஜிம்மி நீஷம் - மிட்செல் சான்ட்னர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.