Advertisement

NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 143 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

Advertisement
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 143 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து!
NZ vs ENG, 3rd Test: இங்கிலாந்தை 143 ரன்னில் சுருட்டியது நியூசிலாந்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 15, 2024 • 08:48 AM

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 15, 2024 • 08:48 AM

அந்த அணியில் வில் யங் 43 ரன்களையும், டம் லேதம் 63 ரன்களையும், கேன் வில்லியம்சன் 44 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மிட்செல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 347 ரன்களை குவித்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய கிரௌலி 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் 12 ரன்னிலும், நட்சத்திர வீரர் ஹாரி புரூக் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட்டும் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்ன்ர் இணைந்த பென் ஸ்டோக்ஸ் - ஒல்லி போப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் ஒல்லி போப் 24 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 27 ரன்னிலும் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 35.4 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூக், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 202 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement