Advertisement

NZW vs INDW: ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!

நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
NZ vs Ind: Smriti Mandhana, Harmanpreet and Mithali star as visitors win fifth ODI
NZ vs Ind: Smriti Mandhana, Harmanpreet and Mithali star as visitors win fifth ODI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 24, 2022 • 10:42 AM

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 24, 2022 • 10:42 AM

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அமிலியா கெர் 66 ரன்களைச் சேர்த்தார். 

Trending

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 9 ரன்னிலும், தீப்தி சர்மா 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்ததுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹர்மன்பிரீத்துடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் 46 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது. இருப்பினும் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement