
New Zealand vs Pakistan 1st T20I Dream11 Prediction: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இந்தியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் இத்தொடரின் மூலம் இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NZ vs PAK, 1st T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள்- நியூசிலாந்து vs பாகிஸ்தான்
- இடம் - ஹாக்லே ஓவல் மைதானம், கிறிஸ்ட்சர்ச்
- நேரம் - மார்ச் 16, காலை 6. 45 மணி (இந்திய நேரப்படி)