-mdl.jpg)
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சைம் அயுப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த மறுபக்கம் களமிறங்கிய, நட்சத்திர வீரர் பாபர் அசாம் 19 ரன்களுக்கும், ஃபகர் ஸ்மான் 9 ரன்களுக்கும், சாஹிப்ஸதா ஃபர்ஹான் ஒரு ரன்னிலும், இஃப்திகார் அஹ்மத் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.