NZ vs PAK : ஆலன், கான்வே அசத்தல்; நியூசிலாந்து அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Trending
இதில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி காட்டி வந்த முகமது ரிஸ்வான் 16 ரன்கள் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொர்ந்து 21 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் பாபர் ஆசமும் பிரேஸ்வெலிடம் விட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த ஷான் மசூத் 14 ரன்களிலும், சதாப் கான் 8 ரன்களிலும் மிட்செல் சாண்ட்னரிடம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹைதர் அலி இஷ் சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மத் - ஆசிஃப் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சில பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். இறுதியில் இஃப்திகார் அஹ்மத் 27 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் இருந்த அசிஃப் அலி 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர், டிம் சௌதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கும் ஃபின் ஆலன் - டேவான் கன்வே இணை தொடக்கம் தந்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து அணியை வெற்றியை நோக்கி ஆழைத்துச் சென்றனர்.
இதில் அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் அரைசதம் கடந்து, 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஆனால் மறுமுனையில் பொறுமையாக விளையாடிய டேவான் கான்வே 49 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெதது.
Win Big, Make Your Cricket Tales Now