
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியை இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனில் இருந்தன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை களமிறங்கினர்.
இதில் நிஷங்கா 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த குசால் பெரேரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் பெரேரா 33 ரன்களில் ஆட்டமிழக்க, குசால் மெண்டிஸும் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.