PAK vs NZ: தொடரிலிருந்து விலகிய ஆலன், மில்னே - பிளெண்டல், ஃபால்க்ஸிற்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், ஆடம் மில்னே இருவரும் காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி உலகக்கோப்பை தொடருக்காக தங்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.
அந்தவகையில், நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது வரும் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தங்கள் ஓய்வு முடிவை திரும்பப்பெற்ற முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Trending
முன்னதாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டெவான் கான்வே, டிரெண்ட் போல்ட், லோக்கி ஃபார்குசன், கிளென் பிலீப்ஸ் மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திர போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்றுள்ளதால் அவர்களுக்கு இத்தொடரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், ஆடம் மில்னே ஆகியோர் காயம் காரணமாக பாகிஸ்தான் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஃபின் ஆலன் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் நியூசிலாந்து டி20 அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மாற்றாக டாம் பிளெண்டல் மற்றும் அறிமுக வீரர் ஸாக் ஃபால்க்ஸ் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now