
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவராக அறியப்பட்டவர் காலின் முன்ரோ. இவர் நியூசிலாந்து அணிக்காக ஒரு டெஸ்ட், 57 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டாயிறத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை விளாசியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரிலும் 13 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இவர் காடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால் அத்தொடருக்கு பிறகு சரியான ஃபர்ம் இல்லாத காரணத்தில் நியூசிலாந்து அணியிலிருந்து கலட்டிவிடப்பட்டார். அதன்படி அவர் நியூசிலாந்து அணிக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடி நான்கு ஆண்டுகள் மேலாகின்றது. இருப்பினும், உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய முன்ரோ, அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 6ஆவது இடம் பிடித்தார். கரீபியன் லீக் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்துள்ள 7ஆவது வீரராகவும் உள்ளார். இதன் காரணமாக இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தது.