
இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. நடைபெற்று வந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையி, இந்நிலையில் நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த சூஸி பேட்ஸ் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எம்ம மெக்லட் 4 ரன்களுக்கும், ப்ரூக் ஹாலிடே 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜியா பிளிம்மர் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 112 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மேடி க்ரீன் 32 ரன்களையும், இஸபெல்லா காஸ் 24 ரன்களையும் சேர்த்தனர்.