வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெத் மெக்காய் சேர்ப்பு!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய மேத்யூ ஃபோர்ட்டிற்கு மாற்று வீரராக ஒபேத் மெக்காய் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது.
Trending
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 4ஆவது டி20 போட்டியானது நாளை மறுநாள் (நவ.17)செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.
ஆதேசமயம் தொடரை இழந்துள்ள் வெஸ்ட் இண்டீஸ் அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ளும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ ஃபோர்ட் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக சிபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஒபேத் மெக்காய் ஓய்வில் இருந்த நிலையில், தற்சமயம் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 38 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஒபேத் மெக்காய் 49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருப்பினும் அவருக்கான மாற்று வீரர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஒபேத் மெக்காய், ஷிம்ரான் ஹெட்மையர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜான் டர்னர்.
Win Big, Make Your Cricket Tales Now