WI vs IND: இந்தியாவுக்கு எதிரான சாதனைப் படைத்த ஒபெத் மெக்காய்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெத் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெத் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
Trending
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் பிராண்டன் கிங் 68 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இப்போட்டியில் 25 வயது இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒபெத் மெக்காய், இதுவரை 2 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகச்சிறந்த டி20 பந்துவீச்சு மற்றும் இந்தியாவுக்கு எதிரான மிகச்சிறந்த டி20 பந்துவீச்சு என இரு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார் ஒபெத் மெக்காய். இந்தியாவுக்கு எதிராக டி20யில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளரும் மெக்காய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now