ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்டன் டெம்பா பவுமா 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரிக்கெல்டனுடன் இனைந்த ஜேசன் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் ரியான் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய ஜேசன் ஸ்மித் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைனும் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வியான் முல்டரும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் தனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ பிரீட்ஸ்கி 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 150 ரன்களைக் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.