Advertisement

வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது - ரோஹித் சர்மா!

வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 7-8 வருடங்களாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடுமையாக போராடுவதுதான் அவர்களது குணமாக இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement
ODI World Is Still Eight To Nine Months Away, Can't Think So Far Ahead: Rohit Sharma
ODI World Is Still Eight To Nine Months Away, Can't Think So Far Ahead: Rohit Sharma (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 04, 2022 • 10:06 AM

டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று முடிந்தப் பிறகு இந்திய சீனியர் வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கவில்லை. இளம் இந்திய அணிதான் அங்கு சென்றிருந்தது. இந்நிலையில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் தற்போது வங்கதேச தொடரில் விளையாட உள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 04, 2022 • 10:06 AM

இரு அணிகளுக்கும் இடையில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. போட்டிகள் 4, 7, 10 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறும். இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் 14-18 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22-26 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறும்.

Trending

ஒருநாள் தொடர் இன்று முதல் துவங்க உள்ளதால், அத்தொடரில் இந்திய அணி எப்படி செயல்படும் என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி கொடுத்துள்ளார். அதில், “வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 7-8 வருடங்களாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடுமையாக போராடுவதுதான் அவர்களது குணமாக இருக்கிறது. இவர்கள் சவாலளிக்கும் வகையில் விளையாடுவதைத்தான் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், எங்களுக்கு அவ்வளவு எளிதாக வெற்றி கிடைக்காது.

அதுமட்டுமல்ல, வங்கதேச அணி ரசிகர்கள், மைதானத்தில், தொடர்ந்து அணியை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இந்த இரண்டு விஷயங்களும், எங்களது வெற்றிவாய்ப்பை மிகவும் கடினமானதாக மாற்றும்” என்று தெரிவித்தார்.

வங்கதேச மைதானங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட முடியாமல் திணறி தொடர் தோல்விகளை சந்தித்திருக்கிறது. இந்த பிட்சில் இந்தியா எப்படி செயல்படும் என ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரோஹித்,  “இங்கு இருக்க கூடிய பிட்ச்களில், பந்துகள் குத்திய வேகத்தில் பேட்டிற்கு வராது. மிகவும் மெதுவாகத்தான் பந்து பேட்டிற்கு வரும் என்பது தெரியும். சில நேரங்களில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும், சில நேரங்களில் இருக்காது. இதனை கணித்து விளையாடுவதுதான், திறமை. எங்களால், சிறப்பாக செயல்பட முடியும்” எனக் தெரிவித்துளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement