டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும் - சூர்யகுமாருக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
நியூசிலாந்துடனான தொடரில் சூர்யகுமார் யாதவ் சொதப்பிய சூழலில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் 1 - 0 என வெற்றி பெற்ற சூழலில், ஒருநாள் தொடரில் 1 - 0 என தோல்வியடைந்தது.
இந்திய அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணம் மிடில் ஆர்டர் சொதப்பல் தான். குறிப்பாக நம்பிக்கை நாயகனாக சூர்யகுமார் யாதவும் சொதப்பியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் போட்டியில் 4, அதன்பின்னர் 34*, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் 2வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார்.
Trending
உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படியா சொதப்புவார் எனும் அளவிற்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்நிலையில் சூர்யகுமாரின் பிரச்சினை என்பது குறித்து ரவி சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் முதலில் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். அந்த அளவிற்கு அவர் பொறுமை காக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ரன்களை வழக்கத்தை விட 30 - 40 பந்துகளுக்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துவிடுகிறார். இதனை சரிசெய்ய சற்று அவருக்கு நேரத்தை கொடுக்க வேண்டும்.
இதே போல என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த ஃபார்மெட். யாரின் மரியாதைக்காகவும் காத்துக்கொண்டிருக்காது. எனவே களத்திற்கு மரியாதை கொடுத்து பொறுமை காக்க வேண்டு. சூர்யகுமாரும் புரிந்துக்கொண்டு வருவார் என நம்புகிறேன்.
வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் விளையாடவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் 50 ஓவர் வடிவத்திற்கு ஏற்றார் போல மாறி வர வேண்டும். அவர் 5ஆம் இடத்தில் களமிறங்கும் போது ஸ்கோர் நன்றாக இருக்கும். அப்போது வேண்டுமானால் அதிரடி காட்டிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now