கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுக்கும் சர்ச்சை வீரர்!
சர்வதேச கிரிக்கெட்டில் விளைடாட தடை விதிகப்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன், தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன். இவர் நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதற்கிடையில் ராபின்சன் கடந்த 2012ஆம் ஆண்டு ட்விட்டர் பதிவில் இனவெறியை தூண்டும் வகையிலும், பாலியல் ரீதியிலான வார்த்தைகளை உபயோகித்தும் பதிவிட்டிருந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவரை அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன.
Trending
இதற்கு ஒல்லி ராபின்சன் மன்னிப்பும் கோரினார். ஆனால் அவரது மன்னிப்பை நிராகரித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் சரவ்தேச போட்டிகளில் விளையாட் 8 மாத தடையை விதித்துள்ளது.
இந்நிலையில் தடை விதிகப்பட்டுள்ள ராபின்சன் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சசெக்ஸ் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ஒரு கடினமான வாரத்திற்குப் பிறகு, ஒல்லி ராபின்சன் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விளையாட்டிலிருந்து ஒரு குறுகிய இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார். வீரர் மற்றும் ஊழியர்களின் நலன் - மனநலம் மற்றும் நல்வாழ்வு உட்பட அனைத்திற்கு சசெக்ஸ் கிளப் முன்னுரிமை அளிக்கிறது. இதனால் ஒல்லி ராபின்சன் எடுத்துள்ள முடிவிற்கு சசெக்ஸ் கிரிக்கெட் கிள்ப் தங்களது முழு ஆதரவையும் தெரிவிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now