
ஐபிஎல் தொடர் 2016ஆவது சீசன் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமாக விளையாடி வந்த ருத்துராஜ் கெய்க்வாட் அடித்த பந்தை பவுண்டரியில் நின்றுகொண்டிருந்த கேன் வில்லியம்சன், பந்தை தடுத்து உள்ளே தூக்கிப்போட்டார். ஆனால் அதை திரும்ப வந்து தடுக்க முடியாமல் காலில் படுகாயம் அடைந்து பவுண்டரிக்கு வெளியே படுத்துவிட்டார்.
மருத்துவர்கள் வேகமாக உள்ளேவந்து கேன் வில்லியம்சனை தோள்பட்டையில் தாங்கியபடி வெளியே தூக்கிச்சென்றனர். பின்னர் ஸ்கேன் செய்வதற்கு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். வெளிவந்த ஸ்கேன் ரிப்போர்ட்டின்படி, அடுத்த ஐந்து வாரங்களுக்கு கேன் வில்லியம்சன் கிரிக்கெட்டில் ஈடுபட முடியாது என்பது உறுதியாகியது. இதனால் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுகிறார் என்று அறிவிப்பை வெளியிட்டது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம்.