
உலகக் கோப்பையின் 9ஆவது ஆட்டத்தில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எதிரணிக்கு அதிக ரன்களை வழங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட்டுகள் ஏதும் எடுக்காமல் 76 ரன்கள் வழங்கியிருப்பார்.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அவர் முக்கியமான தருணத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விக்கெட் உள்பட 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாபர் அசாம், முகமது ரிஸ்வானுடன் வலுவாக கூட்டணி அமைத்து விளையாடி கொண்டிருக்கையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி முகமது சிராஜ் அசத்தினார்.
இந்த நிலையில், ஒரு ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிபடுத்தியதால் அது என்னை மோசமான பந்துவீச்சாளராக மாற்றிவிடாது என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.