
Only AB de Villiers can take on Jasprit Bumrah, says Gautam Gambhir (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் நாளை மறுநாள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பும்ரா போன்ற ஒரு சிறந்த பந்துவீச்சாளரை ஏபி டி வில்லியர்ஸால் மட்டும் தான் சமாளிக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய காம்பீர், “விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் எதிரணியில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல நல்ல வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் 2021 ஒத்திவைப்பதற்கு முன், ஆர்சிபி தனது ஏழு ஆட்டங்களில் ஐந்தில் வென்று, புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது.