
Open to a lot of things if we need to change, says Rohit Sharma (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்து வாகைச்சூடியது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா "எப்போதுமே அனைவராலும் மிகச்சிறப்பாக செயல்பட முடியாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று அதை செய்துள்ளோம். அனைவருமே சிறப்பாக செயல்பட்டோம். இதே போல தொடர் வெற்றிகளை இந்திய அணி குவிக்கும் என நம்புகிறேன்.
அனைத்து வீரர்களின் ஒரே லட்சியம், அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான். உங்களிடம் இருந்து இக்கட்டான சூழல்களில் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை செய்துவிட வேண்டும்.