
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்துமுதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது.
இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் தூபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்எஸ் தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார்.
ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.