சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கெனவே ஓய்வுபெற்ற ஏபி டிவில்லியர்ஸ் ஐபிஎல், பிக் பேஷ் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது அனைத்துவிதமான லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்குள் வந்த ஏபி டிவில்லியர்ஸ் ஏறக்குறைய 10 சீசன்களாக அந்த அணிக்கு விளையாடியுள்ளார். 5 முறை ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் டிவில்லியர்ஸ் காரணமாக அமைந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து டிவில்லியர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், ''எனக்கு ஆர்சிபி அணியுடனான ஐபிஎல் பயணம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியாகவும், மிகுந்த உற்சாகத்துடனும்தான் விளையாடினேன். எனக்கு 37 வயதானாலும் எந்தவிதமான உற்சாகக் குறைவின்றிதான் களத்தில் விளையாடினேன்.