
ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 65ஆவது போட்டியில் விராட் கோலி அற்புதமான அதிரடி சதத்தை சன் ரைசர்ஸ் அணிக்காக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததோடு ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளார். மேலும், தான் தனது பிரதானமான ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக கோலி அறிவித்துள்ளார்.
விராட் கோலி 63 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை எடுத்து அபாரமாக விரட்டினார். விராட் கோலி பவர் ப்ளேவுக்குப் பிறகு மந்தமாக ஆடுகிறார் என்ற விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் . இந்நிலையில் எந்த வடிவத்திற்காகவும் தனது அடிப்படை பேட்டிங் உத்திகளை மாற்றிக் கொள்ளாமல் கோலி ஆடுவதுதான் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் அவரை ஒரு அபாயகரமான வீரராக உலக அணிகளுக்கு நினைக்க வைக்கின்றது.
கோலி ஒரு அனுபவமிக்க வீரராக தன்னுடைய பேட்டிங் பழைய முழுமைச் சிறப்புக்குத் திரும்பி விட்டது என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருப்பதுதான் மிக மிக முக்கியமானது. கோலி போன்ற ஒரு ஜாம்பவான் இத்தகைய தன்னம்பிக்கைக்குத் திரும்பியுள்ளது, உலக கிரிக்கெட்டில் ரிட்டையர் ஆகும் முன் ஒரு பெரிய 2ஆவது இன்னிங்ஸுக்கு அவர் தயார் என்பதையே காட்டுகின்றது.